தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘குடும்பஸ்தன்’ 75வது நாள் கொண்டாட்டம்

1 mins read
b48044bc-ccd3-4469-b3a5-aad6cd4e88c3
படத்தின் நாயகன் மணிகண்டனும் படக்குழுவினரும். - படம்: ஊடகம்

சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றியை தமிழ் திரையுலகிற்குக் கொடுத்துள்ள திரைப்படம் ‘குடும்பஸ்தன்’.

மணிகண்டன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஆர்.சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார் சான்வி மேக்னா.

ஜனவரி 24ஆம் தேதி வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக ஓடிக்கொண்டு இருக்கிறது குடும்பஸ்தன்.

அதன் 75வது நாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்தக் கொண்டாட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்