மணிகண்டன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘குடும்பஸ்தன்’ படத்தின் வசூல் ரூ.25 கோடியை எட்டியுள்ளதாக விநியோகிப்பாளர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மணிகண்டன் நடித்த படங்களில், ஆக அதிக வசூல் கண்ட படமாக இது அமைந்துள்ளது.
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘குடும்பஸ்தன்’ படத்துக்கு எடுத்த எடுப்பிலேயே ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது.
இந்தப் படம் வெளியான இரண்டாவது வாரத்துக்குப் பிறகு அஜித்தின் ‘விடாமுயற்சி’ வெளியாகி திரையரங்குகளை ஆக்கிரமித்தது. எனினும், ‘விடாமுயற்சி’ படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
எனவே, ‘குடும்பஸ்தன்’ படம் மீண்டும் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டதால் படத்தின் வசூலும் அதிகரித்தது.
படம் வெளியாகி நான்கு வாரங்கள் ஆன நிலையில், மொத்த வசூல் ரூ.25 கோடி ரூபாயை எட்டியுள்ளதாம். இதனால் விநியோகிப்பாளர்கள் தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது.