தமிழ்ப் படவுலகில் முதல்முறையாக 21 துறைகளைக் கையாண்டு டாக்டர் குகன் சக்கரவர்த்தியார் இயக்கி நடித்துள்ள படம் ‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’.
மகா சிவராத்திரியை முன்னிட்டு வரும் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இப்படம் குறித்து குகன் சக்கரவர்த்தியார் கூறியபோது, “கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டைப் பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புற படப்பிடிப்புத்தள நிர்வாகி, தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றுடன் கதாநாயகனாவும் நடித்துள்ளேன். இதற்கு முன்பு டி.ராஜேந்தரிடம் உதவியாளராக இருந்தேன். பல படங்களில் நடித்துள்ளேன். நமது மக்களின் வாழ்வியலுடன், டாக்டர் அப்துல் கலாமின் ‘கனவு காணுங்கள்’ என்ற கருத்தை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது,” என்றார்.