கும்கி 2 படத்தின்முன்னோட்டக் காட்சி

1 mins read
96f40851-2d96-4afa-b2b6-7edb1ee93827
கும்கி 2 படத்தின் அறிமுக நாயகர் - கோப்புப் படம்: ஊடகம்

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கும்கி’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வந்தார்.

தொடர்ந்து, பிரபு சாலமன்- சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து ‘கும்கி 2’ படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.

‘கும்கி 2’ படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், கும்கி 2 படத்தின் டீசர் சனிக்கிழமை (அக்டோபர் 18) வெளியானது. டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். கும்கி 2 படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது. விஜய் சேதுபதி டீசருடன், வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், “ஒரு மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான நட்பு மற்றும் பிணைப்பைப் பற்றிய அழகான கதை. முழு குழுவினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்