தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘குஷி’ அடுத்த வாரம் மறுவெளியீடு

1 mins read
d063ca9e-d925-46f6-9cc5-e1966507b17c
குஷி படத்தில் விஜய், ஜோதிகா. - படம்: ஊடகம்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற குஷி திரைப்படம் அடுத்த வாரம் (செப்டம்பர் 25) மறுவெளியீடு காணவுள்ளது.

ஒரு காலத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படங்கள் அண்மைக் காலமாக மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2000ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி வெளியாகி தமிழ் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்ட குஷி திரைப்படமும் மறுவெளியீடு காண்கிறது.

விஜய், ஜோதிகா நாயகன் நாயகியாக நடித்து அசத்தி இருந்தனர். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் இன்றும் ரசிக்கப்பட்டு வருகின்றன.

தமிழில் ஹிட் ஆனதால் இந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் குஷி மறுதயாரிப்பு செய்து வெளியிடப்பட்டது.

தற்போது ஏறத்தாழ 25 ஆண்டுகள் கழித்து பெரிய திரையில் குஷியை மீண்டும் காணும் வாய்ப்பு தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

விஜய் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற கில்லி படத்தை வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் குஷி படத்தையும் மறு வெளியீடு செய்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்