‘செஸ்’ ஆனந்த் வாழ்க்கையைப் படமாக்கும் ஏ.எல்.விஜய்

‘செஸ்’ ஆனந்த் வாழ்க்கையைப் படமாக்கும் ஏ.எல்.விஜய்

1 mins read
2df770ec-f32d-4fd5-94eb-6cbe9499b32c
சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் (இடது), இயக்குநர் ஏ.எல்.விஜய். - படம்: ஊடகம்

உலக அளவில் சதுரங்க விளையாட்டுப் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைத்தவர், விஸ்வநாதன் ஆனந்த் (54).

அவரது வாழ்க்கை வரலாற்றை ஏ.எல்.விஜய் திரைப்படமாக இயக்குகிறார்.

விஸ்வநாதன் ஆனந்த் கதாபாத்திரத்தில் முன்னணி கதாநாயகன் ஒருவர் நடிப்பதாகவும் திரைக்கதையை ஏ.எல்.விஜய்யுடன் இணைந்து சஞ்சய் திரிபாதி எழுதுவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன், கங்கனா ரணாவத் நடிக்கும் ‘லைட்’ என்ற படம் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது என்பது கூடுதல் தகவல்.

குறிப்புச் சொற்கள்
இயக்குநர்திரைப்படம்விளையாட்டு