பழம் பெரும் நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா ’கண்ணப்பா’ என்ற படத்தில் சூனியக்காரியாக நடித்து வருகிறார்.
63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கை வரலாறு தெலுங்கிலும் தமிழிலும் ‘கண்ணப்பா’ என்ற பெயரில் உருவாகிறது.
தெலுங்கு நடிகர் மோகன் பாபு, அவரது மகள் லட்சுமி மஞ்சு இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பட்ஜெட் ரூ.300 கோடியாம்.
இந்நிலையில், தென்னிந்திய மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யாவுக்கு இப்படத்தில் சூனியக்காரியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கதைப்படி இவரது பெயர் மாரியம்மா. அடர்ந்த காட்டில் வாழும் இவரது தோற்றத்தைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், ‘பாகுபலி’ பிரபாஸ், இந்தி நடிகர் அக்ஷய் குமார், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.