ராகவா லாரன்ஸ் என்றாலே அவரது அபார நடனத்தையும் முந்திக்கொண்டு நினைவுக்கு வருவது ‘காஞ்சனா’ படம்தான்.
தற்போது ‘காஞ்சனா’ படத்தின் நான்காம் பாகத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தனது அண்மைய பேட்டியில், ‘காஞ்சனா’ படம் தொடர்பான பயணம் குறித்துப் பேசியுள்ளார் லாரன்ஸ்.
“பேய்க் கதைகளுக்கான ஒரு பாணியை நான் உருவாக்கவில்லை. இதற்காக எனது பங்களிப்பு என்று எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை.
“எனக்கு குழந்தை ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள்தான் பேய்க் கதைகளுக்கான ஒரு ட்ரெண்டை உருவாக்கி உள்ளனர்.
“மேலும், எனது படக்குழுவினரின் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் இதற்கு உதவியது,” எனக் கூறியுள்ளார் லாரன்ஸ்.
‘காஞ்சனா-4’ல் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக நோரா பதேஹியும் வழக்கம்போல் கோவை சரளா, தேவதர்ஷினி, ஶ்ரீமன், ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி எனப் பலரும் இப்படத்தில் இருக்கிறார்கள்.
“முதற்கட்டப் படப்பிடிப்பை பொள்ளாச்சியில் முடித்துள்ளோம். அடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து, படப்பிடிப்பு நடந்தது.
“சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டன். இதில் ‘கே.ஜி.[Ϟ]எஃப்’ பட ராமசந்திரா ராஜூ வில்லனாக நடிக்கிறார். இதற்கு முன்னர், அவர் ‘அரண்மனை 4’ படத்திலும் மிரட்டியிருந்தார்,” என்று சொல்லும் லாரன்ஸ், அடுத்து லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’, ‘புல்லட்’, `கால பைரவா’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.
‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ‘பென்ஸ்’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
“காஞ்சனா-4 படமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் நிச்சயம் கவரும். அதற்கு ஏற்றபடி, திரைக்கதை, வசனங்கள், காட்சி அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்று உறுதிபடச் சொல்கிறார் லாரன்ஸ்.