மூத்த நடிகை வடிவுக்கரசி ‘க்ராணி’ படத்தில் கதை நாயகியாக நடித்து வருகிறார்.
அண்மைக் காலமாக முன்னாள் நாயகிகள், மூத்த நடிகைகள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்கள் வெளியாகி வருகின்றன.
‘அங்கம்மாள்’ படத்தில் கீதா கைலாசம் கதை நாயகியாக நடித்தார். ராதிகா ‘தாய் கிழவி’ என்ற படத்தில் பவுனுத்தாய் என்ற மூதாட்டியாக நடித்துள்ளார். இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
இந்நிலையில், விஜயம் மரி யுனிவர்சல் மீடியா என்ற நிறுவனம் தயாரிக்கும் ‘க்ராணி’ படத்தில் 80 வயது கிழவியாக நடிக்கிறார் வடிவுக்கரசி.
இதில் திலீபன், அபர்ணா, கெஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செல்லையா பாண்டியன் இசையமைக்க, விஜய குமாரன் இயக்குகிறார்.
“இது பேய்க் கதையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் படம். வடிவுக்கரசி சூனியக்காரியாக நடிக்கிறார். அவரது மிரட்டலான நடிப்பு படப்பிடிப்பின்போதே அங்கிருந்தவர்களை மிரள வைத்தது.
“படம் வெளியான பின்னர் திரையரங்குகளில் மேலும் பலர் மிரண்டு போவார்கள்,” என்கிறார் இயக்குநர் விஜய குமாரன்.

