முன்னணி தயாரிப்பாளர் டெல்லி பாபு மறைவு: அதிர்ச்சியில் கோலிவுட் திரையுலகம்
1 mins read
தயாரிப்பாளர் டெல்லி பாபு. - படம்: ஊடகம்
Leading producer Delhi Babu passes away: Kollywood film industry in shock
Producer Delhi Babu, who produced the hit film 'Ratchasan' starring Vishnu Vishal, died suddenly early on Monday morning (September 9). Many actors, producers and directors, including the 50-year-old, have been condoling the demise of the film. Delhi Babu, who produced several films including 'Maragatha Naanayam', 'Iravukku Aayiram Kangal', 'Oh My God', 'Bachelor' and 'Kalvan', has reportedly been treating his health for the past few months.
Generated by AI
விஷ்ணு விஷால் நடித்த ‘ராட்சசன்’ வெற்றிப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் டெல்லி பாபு, திங்கட்கிழமை அதிகாலை (செப்டம்பர் 9) திடீரென காலமானார்.
50 வயதான அவரது மறைவுக்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
‘மரகத நாணயம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘ஓ மை கடவுளே’, ’பேச்சிலர்’, ’கள்வன்’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த டெல்லி பாபு, கடந்த சில மாதங்களாக தனது உடல் நலப் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.