முதல் படத்திலேயே ஒரு பாய்ச்சல்: ‘சிறை’ இயக்குநரைப் பாராட்டிய மாரி செல்வராஜ்

1 mins read
5cec86b0-5ab4-42b2-921a-deff4eeaf8d8
விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ படத்தைப் பாராட்டிய மாரி செல்வராஜ். - படம்: டைம்ஸ் ஆப் இந்தியா

பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு இணையாக, தரமான கதையம்சம் கொண்ட குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்களையும் தமிழ் ரசிகர்கள் கைவிட்டது இல்லை. அந்த வகையில், தற்போது மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றுத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘சிறை’. விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம், வெளியான மூன்றே நாட்களில் உலகளவில் ரூ.3 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிறை படத்தைப் பார்த்தேன். முதல் படத்திலேயே ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் இயக்குநர், இதுபோன்ற கதைகள்தான் எனக்கு வேண்டும் என்று களமிறங்கியிருக்கும் விக்ரம் பிரபு, தயாரிப்பாளர், படத்திற்குச் சிறந்த இசையை வழங்கியிருக்கும் ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோருக்கு வாழ்த்துகளும், நன்றியும்,” என்று பகிர்ந்துள்ளார்.

மேலும், “சிறை படத்துக்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்ப வேண்டும்” என்றும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். தரமான படங்களுக்குக் கிடைத்து வரும் இந்த வரவேற்பு திரையுலகினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரைப்படம்