தவற்றிலிருந்து கற்றுக்கொள்கிறேன்: மஞ்சு வாரியர்

1 mins read
93c5ab27-ac3b-4596-8f6a-dd609bbf6edb
நடிகை மஞ்சு வாரியர். - படம்: ஊடகம்

உலகப் புகழ்பெற்ற பாலே நடனக் கலைஞர் ஜீன் ஜார்ஜஸ் கோவ்ரே பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் தேதி அனைத்துலக நடன தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அதனையொட்டி நடிகை மஞ்சு வாரியர் ‘குச்சிப்புடி’ நடனமாடிக் காணொளி ஒன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்தார்.

அதில் அவர், “இன்னும் தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறேன், அவற்றிலிருந்து கற்றுக்கொள்கிறேன்,” என்று கூறினார். 

மலையாளத் திரையுலகில் முன்னனி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மஞ்சு வாரியர். தமிழில் அசுரன், துணிவு, விடுதலை 2, வேட்டையன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஆர்யா, கவுதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகி வரும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். 

இவ்வாண்டு மோகன்லாலுடன் அவர் நடித்த ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் ஈட்டிய படமாக மாறியது.

இப்படி படங்களில் மிகவும் சுறுசுறுப்பாக நடித்துவரும் மஞ்சு வாரியர் உலக நடன தினத்தை முன்னிட்டு பாரம்பரிய நடனமான குச்சிப்புடி நடனத்தைத் தாளத்துடன் ரசித்து ஆடியது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

46 வயதிலும் எவ்வளவு நேர்த்தியாக நடனத்தை அவர் ஆடுகிறார் என ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்