தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய்யுடன் மோத தயாராகும் தனுஷ்

2 mins read
864566a7-4a1d-4a50-998e-bcd0c7f16be7
படம்: டுவிட்டர் -

தனுஷ் தற்பொழுது நடித்து வரும் படம் 'கேப்டன் மில்லர்'. இந்தப் படம் விஜய் நடிக்கும் 'லியோ' படம் வெளியாகும் நாளன்று வெளியாகும் என்று அறிவித்து கோலிவுட்டை பரபரப்பாக்கி இருக்கிறார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகத் திகழும் தனுஷின் நடிப்பில் தற்பொழுது 'கேப்டன் மில்லர்' படம் உருவாகி வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தப்படம் குறித்த பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகி வலைத்தளத்தை அதிர விட்டு வருகிறது.

தமிழ் மட்டுமில்லாமல் பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் 'வாத்தி' படம் வெளியானது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவான இந்தப்

படத்தில் பள்ளிக்கூட ஆசிரியராக நடித்து மிரட்டியிருந்தார் தனுஷ். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். ரத்தம் தெறிக்க வெளியான 'ராக்கி', 'சாணிக்காயிதம்' படங்களை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன்.

ரத்தக்களரியான படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

1930 - 1940 காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்களை வைத்து 'கேப்டன் மில்லர்' படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

இவர்களுடன் சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும், பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' படம் குறித்து வெளியாகியுள்ள அண்மையச் செய்தி வலைத்தளத்தில் பரவி வருகிறது.

அதாவது இந்தப் படத்தின் வெளியீடு குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர், 'கேப்டன் மில்லர்' படத்தை விடுமுறை தினத்தைக் குறி வைத்து அக்டோபர் மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். விஜய்யின் 'லியோ' படமும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதனால் 'லியோ', 'கேப்டன் மில்லர்' படங்கள் ஒரே நாளில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அவ்வாறு வெளியானால் இரண்டு படங்களுக்கும் இடையே மிகப்பெரிய போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'லியோ' படம் உருவாகி வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திதனுஷ்விஜய்சினிமா