வாழ்க்கை என்பது ஒரு முழு வட்டம் போல எனக் கூறப்படுவது எந்த அளவு என்பதை அண்மைய அனுபவம் ஒன்று தமக்கு உணர்த்தியதாகக் கூறியுள்ளார் நடிகை ராஷி கண்ணா.
இவர் தற்போது ‘120 பகதூர்’ என்ற இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பர்ஹான் அக்தர் நாயகனாக நடிக்கிறார்.
திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு, ‘மாடலிங்’ துறையில் பணியாற்றினார் ராஷி கண்ணா. அப்போது விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.
“அந்த விளம்பரத்தில் முதன்முதலாக பர்ஹான் அக்தருடன்தான் இணைந்து நடித்தேன். பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்போது மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறேன்.
“அப்படியானால், வாழ்க்கை என்பது ஒரு முழு வட்டம்தானே. பர்ஹானுடன் இணைந்து நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி,” என்று கூறியுள்ளார் ராஷி.

