தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விருது தந்துள்ள கௌரவத்துடன் வாழ வேண்டும்: அஜித்

1 mins read
d35146b1-c3dc-46f2-b277-5117dbc23282
அஜித். - படம்: ஊடகம்

‘பத்ம பூஷன்’ விருது பெற்ற பிறகு தனது பொறுப்பு கூடியிருப்பதாகத் தெரிவித்திருந்தார் அஜித். ஆனால் ரசிகர்களோ, “நீங்கள் எப்போதுமே பொறுப்பானவர்தான்,” என்று சமூக ஊடகங்களில் பாராட்டி வருகிறார்கள்.

உங்களைப் பற்றிய அண்மைத் தகவல்களை உடனுக்குடன் தெரியப்படுத்துங்கள் என்பதே அஜித் ரசிகர்களின் ஒரே வேண்டுகோளாக உள்ளது.

இந்நிலையில், கார் பந்தயங்களில் பங்கேற்பதற்காக தனது உடல் எடையை 42 கிலோ அளவுக்கு குறைத்ததாக ஆங்கில ஊடகப் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“விருது பெற்றது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஆனால், அத்துடன் எனக்கு நிறைய பொறுப்புகளும் வந்திருக்கின்றன. அந்த விருது ஏற்படுத்திக் கொடுத்த கௌரவத்துடன் வாழ வேண்டும். இந்த விஷயம் என்னை கவனத்துடன் செயல்பட வைத்திருக்கிறது.

“நான் இப்போது திரைப்படங்களிலும் நடிக்கிறேன், கார் பந்தயங்களிலும் ஈடுபட்டு வருகிறேன். கடினமாக உழைத்து என்னைச் சுற்றியுள்ள அனைவரையும் பெருமைப்படுத்துவேன்.

“கார் பந்தயங்கள் இருக்கும்போது படப்பிடிப்புகளில் பங்கேற்பதில்லை என்றும் படப்பிடிப்பின்போது போட்டிகளில் பங்கேற்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளேன்.

“எதிர்வரும் நவம்பருக்குள் எனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும். அதன் பிறகு படப்பிடிப்பில் பங்கேற்பேன். அடுத்த படம் 2026 ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகக்கூடும்,” என்று தெரிவித்துள்ளார் அஜித்.

குறிப்புச் சொற்கள்