சினிமாவில் வில்லன், நாயகன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் லிவிங்ஸ்டன், தனது மகள் ஜோவிதாவை நடிகை அம்பிகாவின் மகனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவைத்தார். ஆனால், அந்தப் படம் இன்னும் வெளிவராமல் உள்ளது.
இதனைத் தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் தற்போது ஜோவிதா நடித்து வருகிறார்.
இருப்பினும், மகளை சினிமாவில் பெரிய நாயகியாகப் பார்க்க வேண்டும் என்ற அடங்காத ஆசையுடன் தனது மகளின் புகைப்பட ஆல்பத்தை கோலிவுட் இயக்குநர்களின் பார்வைக்கு அனுப்பி, படவாய்ப்பைத் தேடி வருகிறார் லிவிங்ஸ்டன்.