அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘லாக் டவுன்’ திரைப்படம், குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
வரும் ஜூன் மாதம் படத்தை வெளியிடுவதாக டீசர் காணொளி மூலம் அறிவித்திருந்தனர். இதனால் அனுபமா உற்சாகமாக இருந்தார்.
காரணம், இது நாயகியை முன்னிலைப்படுத்தும் கதையுடன் உருவாகியுள்ள படம்.
இந்நிலையில், லைகா நிறுவனத்துக்கு திடீர் பொருளியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக, இப்படத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் பட வேலைகளுக்கு மட்டுமே லைகா நிறுவனம் முன்னுரிமை அளிக்கிறதாம்.
ஓர் அறிமுக இயக்குநரின் படத்துக்கு இப்படியொரு நிலைமையா என ஜீவாவுக்காக பலரும் வருத்தப்படுகிறார்கள்.
அவரைவிட இரட்டிப்புச் சோகத்தில் மூழ்கியுள்ளாராம் அனுபமா.