அல்லு அர்ஜுனை இயக்க லோகேசுக்கு ரூ. 75 கோடி சம்பளம்

1 mins read
3162ba0f-7920-4b5b-a100-d615042d51d9
நடிகர் அல்லு அர்ஜுன் (இடது), இயக்குநர் லோகேஷ் கனகராஜ். - படங்கள்: மாலை மலர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘கூலி’ வசூல் ரீதியில் சாதனை புரிந்தது. அப்படத்தில் ரஜினி, அமீர்கான், சவுபின் ஷாஹிர், நாகர்ஜுன், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

லோகேஷ் அடுத்ததாக ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அல்லு அர்ஜுனின் 23வது படமாக உருவாகும் அப்படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

‘கூலி’ படத்திற்காக லோகேஷ் கனகராசுக்கு 50 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. தற்போது, அல்லு அர்ஜுன் படத்திற்காக 75 கோடி ரூபாயை அவர் ஊதியமாகப் பெற உள்ளதாகத் தெரிகிறது.

ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்