தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலையாளத் திரையின் முதல் ரூ.300 கோடியை எட்டும் துல்கர் சல்மானின் ‘லோகா’

1 mins read
8f9116c1-a71a-47e9-969a-6464ad0322ec
‘லோகா சாப்டர் 1 சந்திரா’ என்ற படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். - படம்: இந்திய ஊடகம்

டொமினிக் அருண் இயக்கத்தில், துல்கர் சல்மான் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘லோகா சாப்டர் 1 சந்திரா’ திரைப்படம் மலையாளத் திரையில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

மலையாள சினிமா அண்மைக்காலமாக இந்தியாவின் பல மொழிகளிலும் கவனத்தைப் பெற்று, மொழி எல்லைகளைத் தாண்டி வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு மலையாளப் படமான ‘லோகா சாப்டர் 1 சந்திரா’ ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளியங்காட்டு நீலி என்ற புராண கதையைக் கொண்டு, டொமினிக் அருண் இயக்கிய படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்து, வாய்மொழி விளம்பரத்தின் மூலம் அதிரடியாக முன்னேறியுள்ளது. இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த ‘எம்புரான்’, ‘துடரும்’ போன்ற படங்களை பின்னுக்கு தள்ளி, ‘லோகா சாப்டர் 1’ மலையாளத் திரையின் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

தற்பொழுது ​​‘லோகா’ மலையாள சினிமாவின் முதல் 300 கோடி ரூபாய் வசூல் சாதனையை நோக்கி பயணித்து வருகிறது. வசூலைக் குறிப்பிடும் சாக்னில் என்ற தளத்தின் அறிக்கையின்படி, உலகளவில் இதுவரை இப்படம் 298 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதாவது, 300 கோடி ரூபாயை எட்ட இன்னும் 2 கோடி ரூபாய் மட்டுமே தேவை. இந்த வெற்றி மலையாளத் திரை உலகில் புதிய சாதனையாகும்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாமலையாளம்