விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் வசூல் குறித்து பலவிதமான தகவல்கள் வெளிவந்தன.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இயக்குநர் லோகேஷ் கனகராஜோ ‘மாஸ்டர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதில்தான் தமக்கு அதிக ஆர்வம் என்று கூறியுள்ளார்.
மேலும், அண்மைய பேட்டியில், விஜய் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப் பேட்டி விஜய் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.
இதையடுத்து, “ரஜினியின் ‘கூலி’ படத்துக்குப் பிறகு விஜய்யை நீங்கள் இயக்க வேண்டும் அண்ணா,” என்று சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, விஜய்க்காக உருவாக்கிய கதை ஒன்றை லோகேஷ் ஏற்கெனவே அவரிடம் கூறி, அது விஜய்க்கும் பிடித்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஒருவேளை விஜய் மீண்டும் நடிக்க இருப்பதாக அறிவித்தால், அவர் லோகேஷ் கூறிய கதையைத்தான் தேர்ந்தெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

