வதந்திகளைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது: பூஜா ஹெக்டே

வதந்திகளைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது: பூஜா ஹெக்டே

படம்: மாலை மலர்

26 Sep 2026 - 3:50 pm

1 mins read

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே.

இயக்குநர் மிஷ்கினின் ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து விஜய், சூர்யா போன்ற முன்னணி நாயகர்களுடன் நடித்து ரசிகர்களின் மனங்களை வென்றார்.

தற்போது துல்கர் சல்மானுடன் இணைந்து ‘ஸ்ரீ ஸ்ரீ’ என்ற படத்தில் நடித்து வரும் இவர், இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் எப்போதும் பேசுபொருளாகவே இருந்து வருகிறார்.

திரைத்துறைப் பிரபலங்களைச் சுற்றி வதந்திகள் உலா வருவது புதிதன்று என்றாலும், தனக்கு எதிராக வெளியாகும் வதந்திகள், பொய்ச் செய்திகள் குறித்து அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பூஜா ஹெக்டே வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பரப்பப்படும் தேவையற்ற தகவல்கள் குறித்து அவர் கூறுகையில், “என்னைப் பற்றி வெளிவரும் சில வதந்திகளைப் பார்க்கும்போது தொடக்கத்தில் கோபம் வந்தாலும், இறுதியில் எனக்குச் சிரிப்புதான் வருகிறது.

“எனக்கே தெரியாத பல விஷயங்கள் மற்றவர்களுக்கு எப்படித் தெரிகிறது என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இதுபோன்ற தகவல்கள் எங்கிருந்து உருவாகின்றன என்றே புரியவில்லை.

“இப்படிப்பட்ட ஆதாரமற்ற செய்திகளை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு மனத்தைக் குழப்பிக் கொள்வதைவிட, அவற்றைக் கடந்து சென்று நமது வேலையில் கவனம் செலுத்துவதே சிறந்தது,” என்று குறிப்பிட்டார் பூஜா.

குறிப்புச் சொற்கள்
நடிகைவதந்திசமூக ஊடகம்செய்தி