தமிழில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்த நிதி அகர்வால், அதன் பிறகு தெலுங்குப் பக்கம் ஒதுங்கிவிட்டார். அங்கும் பெரிய படங்களில் அவரைக் காண முடியவில்லை.
இந்நிலையில், பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தில் நிதி அகர்வால்தான் நாயகியாக நடிக்கிறார்.
மேலும், பவன் கல்யாணின் அரசியல் பயணத்தாலும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகவும் தமக்கான வாய்ப்புகள் பாதிக்கப்பட்டதாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கு முன்பு ‘ஹரிஹர வீர மல்லு’ என்ற படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக ஒப்பந்தமானாராம் நிதி அகர்வால்.
பவன் கல்யாணுக்கு எப்போது படப்பிடிப்பு இருக்கிறதோ, அச்சமயங்களில் இவரும் அதில் பங்கேற்க வேண்டுமென ஒப்பந்தம் போடப்பட்டதாம்.
“இதனால் வேறு படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. பல நல்ல வாய்ப்புகளை இழந்துவிட்டேன்,” என்று புலம்பலுடன் கூறியுள்ளார் நிதி அகர்வால்.

