காதலைப் புதிய பார்வையில் சொல்லும் ‘லவ் புராஜெக்ட்’

காதலைப் புதிய பார்வையில் சொல்லும் ‘லவ் புராஜெக்ட்’

1 mins read
8301414b-6d6e-478c-9d29-0982513dab56
கபில் | சங்கீதா. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

காதலை மையப்படுத்தி உருவாகும் ‘லவ் புராஜெக்ட்’ திரைப்படத்தை டி.ஐ.கபில் கதாநாயகனாக நடித்து இயக்குகிறார். இவர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும்படத்தில் பணியாற்றியவர்.

சங்கீதா, சக்திவேல், குண்டு சத்யா, வினோத், விஜய் சேனாதிபதி ஆகியோர் இதில் நடித்துள்ளனர். சாதிக் கபீர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்குச் சிமியோன் டெல்பர் இசையமைத்துள்ளார்.

படம் குறித்துப் பேசிய இயக்குநர் கபில், “இன்றைய இளையர்களின் காதலையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகும் படம் இது. காதலைப் புதிய பார்வையில் வழங்குவதே எங்கள் நோக்கம். இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்றார்.

தற்போது திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. விரைவில் இதன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்