அண்மையில் வெளியான ‘எமகாதகி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார் ரூபா கொடுவாயூர்.
விஜயவாடாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரூபா, ஆந்திராவில் பிஸியோதெரபிஸ்ட் நிபுணராகப் பணியாற்றி வந்தார்.
முறைப்படி குச்சுப்புடி நடனம் பயின்ற அவருக்கு முதல் வாய்ப்பு தெலுங்கில் அமைந்தது. அடுத்து சில படங்கள் நடித்திருக்கிறார்.
பிறகுதான் தமிழுக்கு வந்திருக்கிறார். ‘எமகாதகி’ படப்பிடிப்பு தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்தது.
“அங்கே கிராம மக்கள் எங்களிடம் காட்டிய அன்பு மறக்கவே முடியாதது. அந்த அப்பாவி மக்கள் அவ்வளவு அக்கறையுடன் படக்குழுவைக் கவனித்துக் கொண்டனர்.
“நாம் ஏதாவது திருப்பிச் செய்வோம் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் உதவும் நல்ல உள்ளம் அவர்களிடம் இருந்தது,” என்று நெகிழ்கிறார் ரூபா.