தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வசூல் ரூ.40 கோடியைக் கடந்த ‘லப்பர் பந்து’ பட வசூல்

1 mins read
eb785f0c-0a1f-403e-b826-6887f18478a8
‘லப்பர் பந்து’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

‘லப்பர் பந்து’ படத்தின் மொத்த வசூல் ரூ.40 கோடியைக் கடந்துள்ளது.

மொத்தம் ஐந்து கோடி ரூபாய் செலவில் உருவான இந்தப் படம், நடிகர்கள் ‘அட்டகத்தி’ தினேஷ், ஹரீஷ் கல்யாண் ஆகிய இருவருக்கும் பெரும் திருப்புமுனையைத் தந்துள்ள படம் எனலாம்.

படம் வெளியாகி ஒருமாதம் கடந்துவிட்ட நிலையில், பட விநியோகிப்பாளர்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதுவரை இப்படத்தின் வசூல் ரூ.40 கோடியைக் கடந்துள்ளதாம். அடுத்த சில நாள்களில் மொத்த வசூல் ரூ.50 கோடியை எட்ட வாய்ப்பு உள்ளதாம்.

அக்டோபர் 18ஆம் தேதி ‘லப்பர் பந்து’ ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்