சிம்பு நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மாநாடு’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதையும் வெங்கட் பிரபுதான் இயக்குவார் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு வி ஹவுஸ் நிறுவனம் சிம்புவை வைத்து ‘மாநாடு’ படத்தைத் தயாரித்தது.
வசூல் ரீதியில் பெரும் வெற்றிபெற்ற இந்தப் படம் சிம்புவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், மாநாடு இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்து வந்தது.
இந்நிலையில், இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதனிடையே, தனது ஐம்பதாவது படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமிதான் இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் சிம்பு.


