‘மத கஜ ராஜா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால், இயக்குநர் சுந்தர்.சி மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளனர்.
தற்போது ‘மூக்குத்தி அம்மன்-2’ படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. அவர் அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குவார் எனக் கூறப்பட்டது. ஆனால், அது சில காரணங்களால் சாத்தியமாகவில்லை.
எனவே, விஷாலை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளாராம் சுந்தர்.சி. இவர் கூறிய கதை விஷாலுக்குப் பிடித்துப்போக, உடனே கால்ஷீட் ஒதுக்கியதாகத் தெரிகிறது. அநேகமாக வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.
‘மூக்குத்தி அம்மன்-2’ படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால் படம் விரைவில் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, விஷால் நடிக்கும் புதுப் படத்தின் பணிகளை இயன்ற விரைவில் தொடங்க உள்ளார் சுந்தர்.சி.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு வேளையில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கறுப்பு படம்’ வெளியாகிறது. அதே நாளில் விஷால் படத்தையும் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.