வருகிறார் ‘மத கஜ ராஜா’

1 mins read
f211363f-75f6-4a03-a6fc-0f25811fe03a
‘மத கஜ ராஜா’ படத்தின் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘மத கஜ ராஜா’ திரைப்படம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவான இந்தப் படம், பல பிரச்சினைகள் காரணமாக நீண்ட காலமாக வெளியாகவில்லை.

இந்நிலையில், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டதை அடுத்து, இப்போது வெளியீடு காண உள்ளது.

விரைவில் இப்படத்தின் புதிய முன்னோட்டக் காட்சித் தொகுப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், பிரகாஷ் ராஜ், சோனு சூட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நகைச்சுவையுடன் கூடிய முழுநீள வணிகப் படமாக இது உருவாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்