பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காதல் படத்தில் நடிக்கிறார் மாதவன்.
சனா ஷேக் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘ஆப் ஜெய்சா கோயி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விவேக் சோனி இயக்குகிறார்.
பத்து வயது இடைவெளி உள்ள இருவர், இணையம் மூலம் அறிமுகமானதும் எவ்வாறு காதல்வயப்படுகின்றனர், பின்னர் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னென்ன என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.
கடைசியாக ‘தனு வெட்ஸ் மனு’ என்ற காதல் படத்தில் நடித்திருந்தார் மாதவன். இந்தப்படத்தை ‘நெட்ஃபிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனராம்.

