பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. கதை நாயகனாக மாதவன் நடிக்கிறார்.
அண்மையில், அவருக்கு ஜி.டி.நாயுடுவைப் போல் ஒப்பனை செய்து புகைப்படம் எடுத்தபோது, ஜி.டி.நாயுடுவின் தோற்றம் அவ்வளவு கச்சிதமாகப் பொருந்தியதாம்.
கோயம்புத்தூரில் நாயுடுவின் பாரம்பரிய வீட்டில் சில காட்சிகளை சோதனை முறையில் படமாக்கி உள்ளனர்.
தமிழில் இப்போது ‘அதிர்ஷ்டசாலி’, ‘டெஸ்ட்’ என இரண்டு படங்களை முடித்துக் கொடுத்துவிட்ட மாதவன், அடுத்து ஜி.டி.நாயுடு படத்தில்தான் முழு கவனத்தையும் செலுத்துவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

