‘லெகசி’ இணையத் தொடரில் மாதவனின் புது அவதாரம்

‘லெகசி’ இணையத் தொடரில் மாதவனின் புது அவதாரம்

1 mins read
fdeab409-ac17-4f17-bd16-6f23e6bedad0
வில்லனாக நடிக்கும் மாதவன். - படம்: மாலை மலர்

திரைத்துறையில் தனக்கெனத் தனி இடம்பிடித்த நடிகர் மாதவன், ‘லெகசி’ என்ற புதிய இணையத் தொடரில் நடிக்கிறார். அடுத்த மாதம் வெளியாகவுள்ள இத்தொடரில் அவர் வயதான நிழல் உலகத் தாதாவாகத் தோன்றுகிறார்.

சரிவைச் சந்தித்த ஒரு குண்டர் கும்பல் தலைவன், இழந்த தனது அதிகாரத்தைத் திரும்பப் பெறப் போராடுவதே இத்தொடரின் கதைக்களம்.

தனது குடும்பத்தைக் காக்கவும், விட்டுச்சென்ற பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும் நடக்கும் போராட்டத்தை இது மையமாகக் கொண்டுள்ளது.

இத்தொடரில் மாதவனுடன் அபிஷேக் பானர்ஜி, நிமிஷா சஜயன், கௌதம் ராம் கார்த்திக், குல்ஷன் தேவய்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

சாருகேஷ் சேகர் இயக்கியுள்ள இத்தொடரை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது. இது நெட்பிளிக்ஸ் இணையத் தளத்தில் வெளியாகிறது.

இதுகுறித்துத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “குற்ற உலகின் பின்னணியில் இக்கதை நகர்கிறது. ஆசை, விசுவாசம், குடும்ப உறவுகள் ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் மோதல்களை இது பேசுகிறது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை இது சென்றடையும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாஇணையச் சேவை