விஜய்யுடன் ‘லியோ’ படத்தில் நடித்த பிறகு, நடிகை மடோனா செபாஸ்டியனுக்கு மீண்டும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றனவாம்.
அந்த வகையில், தமிழில் பிரபுதேவாவுடன் இணைந்து ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தில் நடித்தார்.
இதையடுத்து ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் மடோனா.
இப்படத்துக்கு ‘அதிர்ஷ்டசாலி’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். அண்மையில் ஸ்காட்லாந்து, லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்துள்ளதாம்.
“தமிழ்ப் படங்களில் நாயகியாக நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் மாதவனுடன் இணைந்து நடிப்பதும் அவருடன் லண்டன் படப்பிடிப்பில் கலந்துகொண்டதும் இனிமையான அனுபவமாக அமைந்தது.
“அனுபவ நடிகரான அவரிடம் பல நடிப்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது,” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் மடோனா செபாஸ்டியன்.