‘மகாராஜா’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் நித்திலன். இதற்கு தூண்டுகோலாக இருந்தது விஜய் சேதுபதிதானாம்.
தற்போது ‘ட்ரெயின்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய்சேதுபதி. இதையடுத்து, மிஷ்கின் இயக்கும் படம், பூரிஜெகன்நாத் இயக்கும் படம், ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கும் இணையத்தொடர் என கைவசம் பல வாய்ப்புகளை வைத்துள்ளார். அவரை இயக்க முன்னணி இயக்குநர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அண்மையில் ‘மகாராஜா’ இயக்குநர் நித்திலனிடம், ‘மகாராஜா 2’ வெளியிடுவதற்கான சாத்தியங்கள் இருந்தால் முயற்சி செய்யுமாறு விஜய்சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்.
“அருமையான கதைக்களத்துடன் முதல் பாகத்தை உருவாக்கினீர்கள். அதேபோன்ற வலுவான கதைக்களம் அமைந்தால் இரண்டாம் பாகத்தில் நடிக்க நான் தயார்,” என்று விஜய் சேதுபதி கூறியதையடுத்து, இயக்குநர் நித்திலன் குழுவின் பணிகள் வேகமெடுத்துள்ளன.