தமிழில் ‘மாஸ்டர்’ படத்தின் மூலம் பிரபலமான மாளவிகா மோகனன், தற்போது தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
கடைசியாக இவர் தமிழில் நடித்த ‘தங்கலான்’ படம் வெளியானது. அதன் பின்னர் கார்த்தியுடன் இணைந்து ‘சர்தார் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், தெலுங்கில் ‘பாகுபலி’ பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடிப்பதாகத் தெரிவித்துள்ளார் மாளவிகா.
“பிரபாசுடன் நடிப்பது மிகப்பெரிய வாய்ப்பு. அதைவிட மிகச் சவாலான கதாபாத்திரத்தை அளித்துள்ளார் இயக்குநர்.
“இந்தப் படம் வெளியான பின்னர் இதே போன்று தனித்துவமான கதாபாத்திரங்கள் அதிக எண்ணிக்கையில் என்னைத் தேடி வரும் என நம்புகிறேன்,” என்கிறார் மாளவிகா.
‘தி ராஜா சாப்’ படம் திகிலும் நகைச்சுவையும் கலந்த படமாக உருவாகி வருகிறது. இதில் மாளவிகா எத்தகைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.