நிறைவேறியது மாளவிகாவின் நீண்ட நாள் ஆசை

1 mins read
85936a92-8c38-4c44-86f7-d605460d3ac2
மாளவிகா மோகனன். - படம்: ஊடகம்

தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போவதாக கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.

‘மாஸ்டர்’ படத்தில் நடித்த இவர், தனுஷுடன் ‘மாறன்’, விக்ரமுடன் ‘தங்கலான்’ ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகி உள்ளார்.

தற்போது தெலுங்கில் ‘பாகுபலி’ பிரபாசுடன் ‘ராஜாசாப்’ என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், மலையாளத்தில் முன்னணி நாயகன் மோகன்[Ϟ]லாலுக்கு ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

“தமிழில் ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் நடித்துவிட்டேன். அதேபோல் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இயக்குநர் அந்திகாட் இயக்கும் ‘ஹிருதயபூர்வம்’ என்ற படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது நான் எதிர்பாராத ஒரு வாய்ப்பு,” என்று பூரித்துப்போகிறார் மாளவிகா மோகனன்.

குறிப்புச் சொற்கள்