பிரபல மலையாள நடிகரும் இயக்குநரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் (69) உடல்நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை (டிசம்பர் 20) கொச்சியில் காலமானார்.
1976ல் அறிமுகமான இவர், மலையாள சினிமாவில் யதார்த்தமான, நகைச்சுவை கலந்த கதைக்களங்களை உருவாக்கியவர். ‘நாடோடிக்காற்று’, ‘பட்டனப்பிரவேசம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான இவர், தமிழில் ‘லேசா லேசா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு விமலா என்ற மனைவியும் நடிகர்கள் வினீத் ஸ்ரீனிவாசன், தியான் ஸ்ரீனிவாசன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
அவரது மறைவுக்கு ரஜினிகாந்த், மம்முட்டி, மோகன்லால், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

