தமிழில் அறிமுகமாவது இனம்புரியாததோர் உற்சாக உணர்வைத் தருவதாகக் கூறியுள்ளார் மலையாள இளம் நடிகை அர்ஷா பைஜு.
கேரளாவின் ஆலப்புழா அருகேயுள்ள மன்னார் பகுதியைச் சேர்ந்த இவர், ‘ஃபேமிலி’ என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர், ‘குர்பானி’, ‘மதுரா மனோகர மோகன்’, ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், தற்போது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
இதில் நாயகன் தர்ஷனுக்கு இவர்தான் ஜோடி.
“தமிழில் இது எனது முதல் படம். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரம் கொடுத்த ராஜவேல் அண்ணனுக்கு நன்றி. சிறப்பான குழுவுடன் பணியாற்றி இருக்கிறேன். தர்ஷன் சிறந்த சக நடிகர். கடின உழைப்பாளி. காளி வெங்கட், வினோதினி போன்ற திறமை வாய்ந்த நடிகர்களுடன் நடித்தது மகிழ்ச்சி,” என அண்மையப் பேட்டியில் கூறியுள்ளார் அர்ஷா பைஜு.