மலையாள இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரனை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. ‘பிரேமம்‘ மலையாளப் படத்தின் மூலம் ரசிகர்களை உருக வைத்தவர்.
அடுத்தடுத்து தென்னிந்திய முன்னணி நடிகர்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல்நலப் பாதிப்பால் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார்.
இயக்குநராக மட்டுமல்லாமல் படத்தொகுப்பாளராகவும் கவனம் ஈர்த்தவர் அல்ஃபோன்ஸ் புத்திரன். மலையாளத்தில் பல படங்களின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை அவர் உருவாக்கி உள்ளார்.
இந்நிலையில், அவர் மீது அளவுகடந்த அன்பு கொண்டுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், தனது ‘ரெட்ரோ’ படத்தின் படத்தொகுப்பை அல்ஃபோன்ஸ் புத்திரனைக் கொண்டுதான் தொகுத்திருக்கிறார்.


