சி.ஜே.ராய் தயாரிப்பில், டோவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரில்லர் திரைப்படம் ‘ஐடென்டிட்டி’ (IDENTITY).
இந்தப் படம் மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ் ஊடகத் துறையினருடன் படம் குறித்த அனுபவங்களை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகை திரிஷா, “முதல் முறை மலையாளப் படத்திற்காக பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன். எனக்கு எப்பவுமே மலையாள சினிமா மீது பெரிய மரியாதை இருக்கும்.
“மலையாளப் படங்கள் ரொம்ப வித்தியாசமாக, புத்திசாலித்தனமாக இருக்கும். ஒரு வருஷத்துக்கு ஒரு மலையாளப் படமாவது நடிக்கணும்னு இருந்தேன். சரியான நேரத்தில் இயக்குநர் அகிலைச் சந்தித்தேன். எப்போதுமே மலையாளம் மற்றும் தமிழ் சினிமாத்துறை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது போலத்தான் எனக்கு இருக்கும். இந்தப் படத்தில் நடித்தது எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது . புத்தாண்டை வெற்றியோடு தொடங்குவதில் மகிழ்ச்சி,” என்றார்.

