தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடனமாடிய ஏ.ஆர்.ரகுமானுக்கு குவியும் பாராட்டு

1 mins read
5a40e026-ffcb-4b89-9236-ab66d6d88eaf
படம்: டுவிட்டர் -

இசை, பாட்டு ஆகியவற்றில் பல ஆண்டுகளாக கலக்கி வரும் ஏ.ஆர்.ரகுமான் தற்போது நடனத்திலும் அசத்தியுள்ளார்.

உத­ய­நிதி ஸ்டா­லின் நடிப்­பில் உரு­வாகி உள்ள 'மாமன்­னன்' திரைப்­ப­டத்திற்கு ரகுமான் இசையமைத்துள்ளார்.

'பரி­யே­றும் பெரு­மாள்', 'கர்­ணன்' படங்களை இயக்­கிய மாரி செல்­வ­ராஜ் மாமன்னன் படத்தை இயக்குகிறார்.

அப்படம் தொடர்பான அறிவிப்புகள் அவ்வப்போது சமூக ஊடகங்களிலும் வெளியாகிவருகிறது.

இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் சில நாள்களுக்கு முன்னர் வெளியானது.

அந்தப் பாடலை ரகுமானே பாடியுள்ளார். பாட்டு வரிகள் காணொளியாகவும் வெளியானது.

காணொளியில் பாப் மன்னன் 'மைக்கல் ஜாக்சன்' ஆடும் சில நடன அசைவுகளை ரகுமான் ஆடினார்.

அது இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடலும் மக்கள் மத்தியில் பிரபலமானதால் அவருக்கு சமூக ஊடகத்தில் பாராட்டு மழை பொழிந்தது.

'மாமன்னன்' அரசியல் பின்னணியைக் கொண்ட கதைக்களம் என்பதால் சினிமா ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

வடி­வேலு, பகத் ஃபாசில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்