தற்போது பிரதீப் ரங்கநாதன் காட்டில் வாய்ப்பு மழை கொட்டுகிறது.
‘லவ் டுடே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘டிராகன்’, ‘லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி’ ஆகிய படங்களில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், சுதா கொங்குராவிடம் உதவி இயக்குநராக இருந்த கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார்.
இதை அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தயாரிக்கும் மைத்ரி மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிப்பதாகத் தகவல்.
‘பிரேமலு’ மலையாளப் படத்தின் மூலம் பிரபலமான இவர், தமிழில் ஏற்கெனவே ‘ரெபல்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
மமிதா இயல்பாக நடித்ததாக விமர்சகர்கள் பாராட்டி இருந்தனர்.