‘ரெபல்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மமிதா பைஜு.
மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ படத்தில் நடித்து, தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் இவர்.
தற்போது விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மமிதா நடிக்கிறார்.
இந்நிலையில் அண்மைய பேட்டியில், ‘ஜனநாயகன்’ படத்தில் இதுவரை பார்த்திராத, வித்தியாசமான விஜய்யைப் பார்க்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மேலும், இந்தப் படத்தில் விஜய் ரசிகர்களுக்குப் பிடித்தமான பல ‘சம்பவங்கள்’ இடம்பெற்றுள்ளன. அவர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய விருந்தாக அமையும்.
“அடுத்த மாதம் முதல் அவ்வப்போது படம் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகும்,” என்று மமிதா பைஜு கூறியுள்ளார்.