மம்முட்டி நடிப்பில் வெளியான ‘பிரமயுகம்’ மலையாளப்படம் ஆஸ்கர் அகாடமி நிகழ்ச்சியில் திரையிடப்படுகிறது.
இந்த வாய்ப்பைப் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையும் இதன்மூலம் கிடைத்துள்ளது.
ராகுல் சதாசிவன் இயக்கத்தில் திகில் படமாக வெளியான ‘பிரமயுகம்’ நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு ஏற்கெனவே பல விருது விழாக்களில் பல்வேறு அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன.
தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ‘பிரமயுகம்’ படத்தை திரையிட உள்ளனர்.
நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திகில் படங்களுக்காக இந்த சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி ஆஸ்கார் அகாடமி அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்கத் தேர்வான முதல் இந்தியப் படம் என்ற பெருமையை ‘பிரமயுகம்’ பெற்றுள்ளது.

