மீண்டும் இணையும் மணிரத்னம், விஜய் சேதுபதி

1 mins read
23e25e84-2a07-47d3-ae6e-c7bc7a2df4a6
‘ஏஸ்’ படத்தில் விஜய் சேதுபதி, ருக்மினி வசந்த். - படம்: ஊடகம்

‘தக் லைஃப்’ படத்தின் எதிர்பாராத தோல்வியை அடுத்து, மௌனம் காத்துவந்த இயக்குநர் மணிரத்னம் தற்போது அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார்.

இம்முறை இளையர்களைக் கவரும் வகையில் ஒரு காதல் கதையை இயக்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், நாயகனாக துருவ் விக்ரம் ஒப்பந்தமான நிலையில், கதாநாயகி யார் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை என்கிறார்கள்.

முன்னதாக, சிம்புவைத்தான் நாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என இயக்குநர் தரப்பில் திட்டமிடப்பட்டிருந்ததாம். ஆனால் சிம்பு தரப்பில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதால் துருவ் விக்ரம் உள்ளே வந்துள்ளார்.

அது மட்டுமல்ல, சிம்புவைத் தனி நாயகனாக வைத்தும் ஒரு படத்தை இயக்குவது மணிரத்னத்தின் திட்டமாக இருந்துள்ளது. ஆனால் அவர் மொத்தமாக ஒதுங்கிவிட்டதாகத் தகவல்.

எனவே, சிம்புவுக்குப் பதிலாக விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏற்கெனவே ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்புவும் சேதுபதியும் இணைந்து நடித்திருந்தனர். இதில் கதாநாயகியாக நடிக்க ருக்மினி வசந்த் ஒப்புக்கொண்டதாகவும் அவரிடம் சம்பளம், கால்ஷீட் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்