‘அலைபாயுதே’ படம் தொடர்பான ஒரு ரகசியத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
மாதவன், ஷாலினி நடிப்பில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் முதலில் ஷாருக்கான், கஜோல் ஆகிய இருவரையும்தான் ஒப்பந்தம் செய்ய நினைத்திருந்தாராம்.
ஷாருக்கானும் கதை பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்துள்ளார். ஆனால் படத்தின் இறுதிக்காட்சியை எப்படி அமைப்பது என்பதில் குழப்பம் நிலவியதால் அப்போதைக்கு ‘அலைபாயுதே’ படத்தை கிடப்பில் போட்டுவிட்டாராம் மணிரத்னம்.
“இடைப்பட்ட நேரத்தில் ‘தில் சே’ படத்தை இயக்கினேன். அதை முடித்த பிறகுதான் ‘அலைபாயுதே’ கதையில் நான் எந்த அம்சத்தை கவனிக்கத் தவறினேன் என்பதைக் கண்டு பிடித்தேன். படம் பெரும் வெற்றி பெற்றது,” என்று அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டுள்ளார் மணிரத்னம்.

