அடிதடிப் படத்தில் மணிகண்டன்

அடிதடிப் படத்தில் மணிகண்டன்

கோப்புப் படம்: சினிமா எக்ஸ்பிரஸ்

07 Aug 2026 - 3:57 pm

1 mins read

‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ ஆகிய வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தவர் நடிகர் மணிகண்டன். அவர் முதன்முறையாக முழுநீள அடிதடி படத்தின் கதாநாயகனாகக் களமிறங்குகிறார்.

மக்கள் காவலன் என்ற தலைப்பிலான அப்படத்தை இயக்குபவர் சந்தோஷ் குமார்.

நேர்மை, கண்ணியம் ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாழும் ஒரு சராசரி மனிதன், ஊழல் நிறைந்த சமூகத்தை எதிர்கொள்ளும்போது எவ்வாறு மக்களின் தலைவனாக மாறுகிறான் என்பதே இப்படத்தின் கதைக்களம் என விவரிக்கிறார் இயக்குநர்.

வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர்.

“இப்படத்தின் கதையை இயக்குநர் விவரித்த விதம் விறுவிறுப்பாக இருந்தது. இன, கலாசார மோதல்களை மையமாகக் கொண்ட அதன் கரு, அதிலிருந்த புதுமை என்னை மிகவும் கவர்ந்தது,” என்றார் மணிகண்டன்.

இது அவரது திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமையும் என்கிறார் இயக்குநர்.

குறிப்புச் சொற்கள்
நடிகர்திரைப்படம்அடிதடிஇயக்குநர்