தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெற்றி மாறனின் சினிமாட்டிக் யுனிவர்சில்இணைந்த மணிகண்டன்

1 mins read
2239a3ff-52e2-4faf-9a6b-4e1774be4f18
வெற்றி மாறன் படத்தில் ‘குட் நைட்’ புகழ் மணிகண்டன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. - கோப்புப் படம்

வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக உள்ளதாகத் தெரிகிறது.

சிம்பு அடுத்ததாக STR 49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் அறிவிப்பு வீடியோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது.

இதற்காக சிம்பு புது கெட்டப்பில் காணப்படுகிறார். இப்படத்தின் கதைக்களம் வட சென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இப்படம் எடுப்பதற்கு தனுஷ் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்ததாக சமீபத்தில் தகவல் வெளிவந்து அது உண்மையில்லை என மறுத்து வெற்றிமாறன் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இந்நிலையில் இப்படத்தில் சிம்பு இரண்டு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

ஒன்று இளமை மற்றும் சிறிய முதுமை தோற்றத்திலும் நடிக்கிறார். படத்தில் குட் நைட் புகழ் மணிகண்டன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிகண்டன் நடிக்கும் கதாபாத்திரம் இப்படத்திலும் வட சென்னை 2 படத்திலும் இடம் பெறும் கதாபாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

குறிப்புச் சொற்கள்