‘குடும்பஸ்தன்’ படத்தின் நாயகன் மணிகண்டன் அருமையான இணை நடிகர் என்று பாராட்டி உள்ளார் அப்படத்தில் அவருடன் இணைந்து நடித்த சான்வி மேக்னா.
மணிகண்டனை சிறந்த நண்பர் என்று கூறலாம். அவரைப் போன்ற திறமை வாய்ந்த நடிகரோடு பணிபுரிந்தது ஓர் அழகான அனுபவம்,” என்று தமது சமூக ஊடகப் பக்கத்தில் சான்வி குறிப்பிட்டுள்ளார்.
மணிகண்டன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி வெளியான ‘குடும்பஸ்தன்’ படத்தை ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, ஐந்து புதிய படங்களில் மணிகண்டன் ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது திறமையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.