மீண்டும் விக்ரம்-ஐஸ்வர்யா

1 mins read
3dd5a971-1b32-4d65-a0e8-dc86aaf0b448
விக்ரம், ஐஸ்வர்யா ராய். படம்: ஊடகம் -

கமல்ஹாசன் நடிக்கும் புதுப்படத்தை இயக்கி முடித்த கையோடு, விக்ரமை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தை கமலின் சொந்த நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்துக்கான பணிகளைத் தொடங்கிவிட்டார் மணிரத்னம்.

அதனையடுத்து, அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் விக்ரமை நாயகனாக வைத்து அவர் இயக்கவுள்ள புதுப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிப்பார் எனக் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யாவிடம் கதையைச் சொல்லி, கால்ஷீட்டும் பெற்றுவிட்டாராம் மணிரத்னம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வணிக அம்சங்கள் நிறைந்த படமாக இது இருக்கும் என்கிறது இயக்குநர் தரப்பு.

அதே வேளையில், விக்ரமின் நடிப்புப் பசிக்குத் தீனி போடும் வகையில் அவரது கதாபாத்திரத்தை மணிரத்னம் செதுக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.