நடிகை மஞ்சு வாரியருக்கு இருசக்கர வாகனங்களை ஓட்டுவது என்றால் மிகுந்த விருப்பம் உண்டு.
‘துணிவு’ படத்தில் அஜித்துடன் நடித்தபோது அவரது குழுவினருடன் சேர்ந்து தொலைதூர பைக் பயணங்களில் ஈடுபட்டார்.
மேலும், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றைச் சொந்தமாக வாங்கினார் மஞ்சு. அதன் பின்னர் அவ்வப்போது சில இடங்களுக்கு பைக் பயணம் மேற்கொண்டு அதைக் காணொளியாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்வதே மஞ்சுவின் முக்கியமான வேலையாக இருந்தது.
இந்நிலையில், இந்தப் புத்தாண்டையொட்டி ராமேசுவரம், தனுஷ்கோடி சாலைகளில் பைக் பயணம் மேற்கொண்டாராம்.
இதையும் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள அவர், “எவ்வாறு இருந்ததோ, எவ்வாறு இருக்கிறதோ, எவ்வாறு இருக்கப் போகிறதோ, அனைத்துக்கும் நன்றி,” என்று புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

